சனி, 28 பிப்ரவரி, 2009

தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தன் எழுதிய நூல்கள்


சிறுவர் நூல்கள்
* இந்தக் காட்டுக்கு யார் ராஜா வசந்தா பதிப்பகம்
* காட்டிலே தேர்தல் முருகன் பதிப்பகம்
* இந்தப்ப ழம் இனிக்கும் சிநேகா பதிப்பகம்
* நரி சொன்ன நல்ல கதைகள் அருணோதயம் வெளியீடு
* நல்வழி காட்டும் இனிய கதைகள் கவிதா பதிப்பகம்
* சிறுவர் நகைச்சுவை நாடகங்கங்கள் அறிவாலயம் வெளியீடு
* அன்பு தம்பிக்கு அறிவூட்டும் கதைகள் அலைகள் வெளியீட்டகம்
* விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள் (தமிழக அரசு பரிசு பெற்றது) ஸ்ரீ கமலம் பதிப்பகம்
* மயில் அண்ணா வனிதா பதிப்பகம்
* நரி சொன்ன நல்ல தீர்ப்பு அம்சா பதிப்பகம்
* மன்னனின் பேராசை (திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு பெற்றது) ஜோதி புக் சென்டர்
* சிறுவர்களுக்கான விலங்குகள் கதைகள் வனிதா பதிப்பகம்
* கண்ணே பாப்பா கதை கேளு ஜியே பதிப்பகம்
* ஆனந்தம் எங்கும் ஆனந்தம் தென்றல் பதிப்பகம்
* நிலாவின் பிறந்த நாள் மணிவாசகர் பதிப்பகம்
* நீதிக்கதைகளில் சொல்ல மறந்த மீதிக் கதைகள் மணிவாசகர் பதிப்பகம்
* அன்பு விலங்குகளும் அறிவுக் கதைகளும் ஸ்ரீ கமலம் பதிப்பகம்
* சிந்திக்கத் தெரிந்த சிங்கம் நிவேதிதா பதிப்பகம்
* யாருக்கு மணிமகுடம் நாவல் அஜிதா பதிப்பகம்
* சுட்டி நிலா நாவல் அஜிதா பதிப்பகம்
* மஞ்சள் பை மர்மம் நாவல் அஜிதா பதிப்பகம்
* முதலைத் தீவு நாவல் வனிதா பதிப்பகம்
* மரங்களின் கதைகள் குறள் நிலவன் பதிப்பகம்
* மலர்களின் கதைகள் குறள் நிலவன் பதிப்பகம்
* இலைகளின் கதைகள் குறள் நிலவன் பதிப்பகம்
* கனிகளின் கதைகள் குறள் நிலவன் பதிப்பகம்

பல்சுவை நூல்கள்
* சிலம்ப சிற்பிகள் முருகன் பதிப்பகம்
* உலகப் பெண்களின் உன்னத நிகழ்ச்சிகள் முருகன் பதிப்பகம்
* மேதைகளின் வாழ்வில் நடந்த விசித்திர நிகழ்ச்சிகள் முருகன் பதிப்பகம்
* முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள் முருகன் பதிப்பகம்
* வித்தியாசமான போராட்டங்கள் தமிழ்மணி பதிப்பகம்
* உலக நாடுகளின் சுவையான நிகழ்ச்சிகள் புவனேஸ்வரி பதிப்பகம்
* பெரும் புள்ளிகளின் புத்திசாலித்தனமான பதில்கள் மணிமேகலைப் பிரசுரம்
* சொற்களும் சுவையான விளக்கங்களும் மணிமேகலைப் பிரசுரம்
* ஆன்மீன ஐயங்களும் விடைகளும் மணிமேகலைப் பிரசுரம்
* யானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள் மணிமேகலைப் பிரசுரம்
* உலகம் முன்னேற வழிகாட்டிய முதல் சம்பவங்கள் மணிமேகலைப் பிரசுரம்
* நாய்களைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகள் மணிமேகலைப் பிரசுரம்
* உலகப் பெண்களைப் பற்றிய சுவையான செய்திகள் மணிமேகலைப் பிரசுரம்
* பெரியது, சிறியது, அரியது அச்சில்....
* ஊனம் என்ன செய்துவிடும் உலகை ஆளலாம் வாருங்கள் அச்சில்...
* இலக்கிய புதிர்கள் அச்சில்...
* வித்தியாசமான வழக்குகள் அச்சில்...
* புகழ்மிக்கவர்களின் விநோதப் பழக்கங்கள் அச்சில்....
* மருத்துவப் புதிர்கள் அச்சில்....
* மனைவி மொழிகள் அச்சில்....
* குழந்தைகளைப் பற்றிய அருமையான பொன்மொழிகள் அச்சில்...
* விபரீதமான போக்குகளும், விநோதமான தண்டனைகளும் அச்சில்...
* ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மேதை வனிதா பதிப்பகம் (இரண்டு தொகுதி)
* தினம் ஒரு கதை (மூன்று தொகுதி) தென்றல் பதிப்பகம்
* பெண்களுக்கான நோய்களும் தீர்வுகளும் தென்றல் பதிப்பகம்
* எளிதான இலை மருத்துவம் தென்றல் பதிப்பகம்
* நலம் தரும் கீரைகள் தென்றல் பதிப்பகம்
* நோபல் பரிசு பெற்ற பெண்கள்
* விழிவாசல்... வழிவந்து... தென்றல் பதிப்பகம்
* முத்தம் குளிக்க வாரீகளா... பாலா புக்ஸ்
* அறிவுக்கு விருந்தாகும் அற்புதச் செய்திகள் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்
* சுனாமியின் பசி... (தமிழில் முதன் முதலாக வெளிவந்த சிறுகதை நூல்)

* உலகை வியக்க வைக்கும் கின்னஸ் சாதனைகள் வனிதா பதிப்பகம்
* உங்களாலும் முடியும் கின்னஸில் இடம் பெற...
* நீங்களும் கின்னஸில் இடம் பெறலாம்....
* கின்னஸில், நீங்கள் மட்டுமா நாங்களும் தான்
* வாங்க கின்னஸில் இடம் பிடிக்கலாம்...
* கின்னஸில் இந்தியர்கள் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்
* சாதனைகள் கின்னஸ் சாதனைகள்
* இணையற்ற இந்தியர்கள் நிவேதிதா புத்தகப் பூங்கா
* விலங்குகளைப் பற்றிய விநோத செய்திகள் முத்தமிழ் பதிப்பகம்
ஆன்மிக நூல்கள்
* அருள் வழங்கும் தெய்வமே அண்ணாமலை தீபமே! ஜெயலட்சுமி பதிப்பகம்
* ஆதி சங்கரர் நிவேதிதா புத்தகப் பூங்கா
* இராமானுஜர் நிவேதிதா புத்தகப் பூங்கா
* அன்னை சாரதா தேவி நிவேதிதா புத்தகப் பூங்கா
* மத்வாச்சாரியார் கிழக்குப் பதிப்பகம்
* ஆலயங்களும் அற்புதங்களும் பாலா புக்ஸ்
கவிதை நூல்கள்
* இதய மலர்கள் கோவி.அன்பழகன் வெளியீடு
* வேதனைகள் நீலா வெளியீடு
* நியூவேவ் கவிதை துளிகள் (தஞ்சை மாவட்ட ஜெய் எண்டர்டெயின்மெண்ட் அசோஷியேஷன் மாயூரம்)
* அன்பின் ஆலயம் அன்னை தெரசா (சென்னை அன்னை வேளாங்கண்ணி பெசன்ட் நகர் திருத்தலம்)
* வாழ வைக்கும் வாழப்பாடியார் (தென்சென்னை மாவட்ட தமிழக ராஜீவ் காங்கிரஸ்)
முகவரி
பாபநாசம் குறள்பித்தன்,
13/1 2வது குறுக்குச் சந்து,
வெள்ளாளர் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை 24
அலைபேசி: 99415 15237
---------------------------------------------------

இவரைப்பற்றி இவர்கள்....

* வஞ்சமில்லாமல் பாராட்டப்பட வேண்டியவர் பாபநாசம் குறள்பித்தன். பகுத்தறிவை நாசப்படுத்தாத கவிஞர் இவர். இந்தக் கவிஞர், விரைந்து எழுதக் கூடியவர். வீணான எழுத்துக்களை ஒருபோதும் எழுதாதவர். செய்திகளைத் தேடுவதில் என்னைப் போலவே பொழுதுக்கும் காலத்தைப் பயன்படுத்தக் கூடியவர். இவர் செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர் மட்டுமல்ல. சீரிய கவிஞர். அருமையான பத்திரிகையாளர். அற்புதமான எழுத்தாளர், அதிலும் குழந்தைகளுக்காக எழுதுவதில் வல்லவர்.
உவமைக் கவிஞர் சுரதா.


** இதுவரை குழந்தைகளுக்காக இவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதுவும் விலங்குகளையும், பறவைகளையும் ஈடுபடுத்தி நூற்றுக்கணக்கான சிறுவர் கதைகளை எழுதி சாதனையே செய்திருக்கிறார்.
அந்துமணி (பொறுப்பாசிரியர் தினமலர்)


** குறள்பித்தன் எனக்குக் குடையாய் இருப்பவர். சின்னக் குருத்திலிருந்தே என்னைக் குணம் கண்ட தோழர். தஞ்சை, குடந்தை தமிழகமெங்கும் தமிழ்த்தடம்பதித்தவர். எழுத்துத் தேரைப் பூட்டி எல்லா இதழ்களிலும் உழுது வருபவர், பதிப்பகப் பண்ணைகளில் பலமரக் கன்றுகளை பாத்தியமைப்பவர்.
செங்கனிக் கவிஞர் காவிரி நாடன், நிறுவனர், எழுத்துலகம்


** அருமைச் சகோதரர் பாபநாசம் குறள்பித்தன் சீரிய சிந்தனையாளர், இலக்கியப் புலமை மிக்கவர். நிரம்பவும் கவிதை ஆற்றல் பெற்றவர். பொருள் படைத்தவர்கள் இப்படிப்பட்ட சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டு, உற்சாகப்படுத்தி உதவி புரிந்தால் தரமான இலக்கியப் படைப்புகள் வளரும் என்று நம்புகிறேன்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை.துரைசாமி


** ஒரு நல்ல கவிஞரை, நல்ல மனிதரை நண்பராகப் பெற்றமைக்காக இந்த இனிய வேளையில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பரைப் பாராட்டி மகிழ்கிறேன்.
ஜோதிட ரத்னா, லயன் டாக்டர் கோபி.வித்யாதரன்


** இனிய தோழர், கவிஞர் பாபநாசம் குறள்பித்தனின் எழுத்துக்களை நான் நீண்ட நாளாக நேசித்து வருபவன்; வாசித்து வருபவன்.
மக்கள் இயக்குநர் வெ.சேகர்


** எளிமையின் சின்னமாக வாழ்ந்து வரும் இவரின் புகழ் எதிர்காலத்தில் உலகமெங்கும் பரவும். காரணம், மிகவும் திறமைமிக்கவர் இவர் என்பதால்தான் இப்படிக்கூறி இவரை வாழ்த்துகிறேன்.
ராணி கிருஷ்ணன் (அன்னை பாத்திமா குழந்தைகள் காப்பகம்)
** கவிஞர்: பாபநாசம் குறள்பித்தன் நிகழ்கால எழுத்தாளர்; நம் காலத்தில் நம்மோடு வாழ்கிறவர் என்பதால் இவரது பெருமை நம்மில் பலருக்குத் தெரியவில்லை. காலம் கடந்த பிறகும் அமர காவியமாக இவரது எழுத்துக்கள் நின்று நிலைத்து நிற்கும். இது சத்தியம்!
வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்


** அய்யாவின் உலராத உழைப்பையும், தளராத நம்பிக்கையையும் போற்றி வணங்குகிறேன்.
எஸ்.இராஜகுமார், ஆசிரியர், முத்துச்சிதறல் மாத இதழ்


** இவரோடு இருபத்தைந்தாண்டுகளாக நட்பு கொண்டு இருக்கும் நான் இவரிடம் கண்டது, கண்டு வருவது... அதே எளிமை, எதிர்பார்ப்பு இல்லாத இதயம். பிறர் உயர்விற்காக உதவும் பண்பு இதனால்தான் மகிழ்வோடு அவரால் இருக்க முடிகிறதோ! இந்த நிலை இறைவன் அவருக்குத் தந்த வரம் என்றே எண்ணுகிறேன். எல்லோருக்கும் இது வாய்க்காது.
கவிஞர் இளமதி காந்தன்


** இவரது உழைப்பை என்னைப்போல் பலரும் உணர்ந்தால், இந்த நல்ல எழுத்தாளரின் பொருளாதாரத்தை எளிதில் உயர்த்திவிடலாம்.
மருத்துவத்திலகம் டாக்டர்.வி.ஜமுனா, ஆசிரியர்,
மூலிகைக் குழந்தைகள் மாத இதழ்


** எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பாபநாசம் குறள்பித்தன் அவர்களை "தாய்' வார இதழில் பணியாற்றிய காலம் தொட்டே அறிவேன். இருபது ஆண்டுகளுக்கு முன் அவரது எழுத்தும் சிந்தனையும் எப்படி பயன்பாட்டோடு இருந்ததோ அப்படியே இன்றும் இருப்பதைக் காண்கிறேன்; மகிழ்கிறேன். பத்திரிகையாளர்களில் இவர் மிகவும் வித்தியாசமானவர்....
மெர்சி பாஸ்கர் (இயக்குநர் அமைதி அறக்கட்டளை)


** சிறுவர் இலக்கியத்திற்காக தமிழக அரசு விருதையும், திருப்பக்ஷர் தமிழ்ச்சங்க விருதையும் பெற்றுள்ள பாபநாசம் குறள்பித்தன் அவர்கள் இன்னும் பல விருதுகளும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மெ.மீனாட்சி சோமசுந்தரம், மணிவாசகர் பதிப்பகம்


** திரு.பாபநாசம் குறள்பித்தன் அவர்களை "தாய்' வார இதழில் துணையாசிரியராக இருந்தபோதே அவரது பெயரை அறிந்தவன் நான். தற்போது நேரில் கண்டு பழகிவரும் வாய்ப்பு கிடைத்து பழகி வருகிறேன். அவர் சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட.
சித்த மருத்துவர் ப.குழந்தைவேலு, ஒ.க.சித்த வைத்திய சாலை


** சிறு வயது முதலே கலை ஆர்வமும், இலக்கிய ஈடுபாடும் இதயத்தில் கொண்டிருந்த திரு:பாபநாசம் குறள்பித்தன் ஐயா அவர்களை கதைகள், கவிதைகள், பேட்டிகள் மூலமாகவும், குறிப்பாக குழந்தை இலக்கியப் படைப்பாளியாகவே எனக்கு அறிமுகமானவர். இவரது எழுத்துக்கள் படிப்போர் உள்ளங்களை செழுமைப்படுத்தக் கூடியவை.
டாக்டர் வேணி திருத்தணிகாசலம், நிர்வாக ஆசிரியர்,
மூலிகை நேரம் மாத இதழ்


** இனிய கவிஞர்: இணையற்ற நண்பர், என்றும் எந்நிலையிலும் தன்னிலை மாறாத தமிழ்ப்பண்பாளர் பாபநாசம் குறள்பித்தன். கவிதைகள், கட்டுரைகள் படைத்தளிப்பதில் வித்தகராவார்! இப்போது வித்தியாசமாக வரலாறுகளைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.
பாவேந்தர் விருது பெற்ற பாவலர் கவிஞர் மணிமொழி


** கவிதை, கதை, நாடகம், நாவல்கள் மட்டும் எழுதுபவர் அல்ல. இவருக்கு ஆன்மிகம் தெரியும். அறிவியல் புரியும். அத்தோடு, சித்த மருத்துவத்திலும் சிந்தை பதித்தவர். பாண்டிச்சேரி டாக்டர் என்.தர்மராஜ்.


** என் சிந்தனையை சிறைபடுத்திய இவரின் விரல்களையும், எழுதுகோலையும் சமயம் பார்த்து நான் ரகசியமாய் களவாட காத்து இருக்கிறேன்.
கவிஞர் சூளைமேடு இர.அன்பரசன்


** பாபநாசத்தில் பிறந்த அறிவுப் பயிர் திரு.குறள்பித்தன் அவர்கள்.
கவிஞர் இரா.கவிராஜன் (கவிஞர் கலை இலக்கியச் சங்கம்)
** எழுத்துலகில் இணையற்ற பேராசிரியராக விளங்கி வருபவர் பாபநாசம் குறள்பித்தன் ஆவார். துள்ளும் இளமைப்பருவ காலந்தொட்டே தன் உள்ளத்தில் குதித்து எழும்பும் கவிதை வரிகளை பிறர் மேல் அள்ளித் தெளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மிக்கவர். தனித்திறமை பெற்றவர். தன்னம்பிக்கை மிக்கவர். இவரின் எழுத்தாற்றல் தனிப்பெரும் தன்மையுடையது.
முனைவர் ஆ.பாலனார் முன்னாள் துணை முதல்வர்,
கரந்தைக் கலைக் கல்லூரி


** நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் வானத்தில் வட்ட நிலா போல, மனிதர்கள் சிதறிக் கிடக்கும் பூமியில் மனிதமாகிப் போனவர் திரு.பாபநாசம் குறள்பித்தன் அவர்கள். எப்பொழுது பார்த்தாலும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்துப் பிசாசு. தன்னைச் சுற்றி குவிந்து கிடக்கும் கருத்துப் புதையல்களை அடைகாத்து வைத்திருக்கும் அறிவு பூதம். எதிரியானாலும் தன் பாசப் பார்வையால், நேசப் பேச்சால் அடித்து வீழ்த்திடும் அன்பு ராட்சஸம். எதிர்மறை எண்ணங்களை குழந்தைகளிடம் விதைக்க மறுக்கும் எழுத்து விவசாயி. அன்பு, அகிம்சை, நேர்மை ஆகியவற்றை எழுத்தில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் கடைபிடிக்கும் அபூர்வ மனிதர். கவிஞர் கி.முத்துக்குமாரன்.

பெயர் : பாபநாசம் குறள்பித்தன் (த.வெ.கண்ணன்)
உயிர்ப்பித்தவர் : தனம் வெங்கிடாசலம்
கண் விழித்த நாள் : 19.07.1947 பாபநாசம் (திருப்பாலைத்துறை) தஞ்சை மாவட்டம்.
கல்வி நிலை : புலவர் (தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி)
**
1965இல் முதன் முதலில் சுதேசமித்திரன் நாள் இதழில் எழுத்துத் தொடக்கம்.
** புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர்.அவர்கள் நடத்தி வந்த "தாய்' வார இதழில் துணையாசிரியராக 10 ஆண்டுகள் பணி.
எழுதிய நூல்கள்:
சிறுவர் நூல்கள் 24
ஆன்மிக நூல்கள் 8
நாடக நூல்கள் 5
கவிதை நூல்கள் 6
பல்துறை நூல்கள் 33
பெற்ற விருதுகளும் பரிசுகளும்:
** வி.ஜி.பி. விருது "சிறந்த கவிஞர்' பரிசு 1,000 ரூபாய் ஆண்டு 1984
** மனித நேய அறக்கட்டளை பரிசு 7,500 ரூபாய் ஆண்டு 2001.
** திருப்பூர் தமிழ்ச் சங்கம்: "மன்னனின் பேராசை' சிறுவர் நூலுக்கான முதல் பரிசு 2000 ரூபாய். ஆண்டு 2002.
** தமிழக அரசின் சிறுவர் இலக்கியத்திற்கான முதல் பரிசு 10,000 ரூபாய்.
** காஞ்சி அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் விருது "முத்தமிழ்ச்சுடர்' ஆண்டு 2008.
** மதுராந்தகம் மகாகவி பாரதி நற்பணி மன்றம். விருது. "படைப்புச் செம்மல்' 2008.

அலைபேசி: 99415 15237அலைபேசி: 99415 15237அலைபேசி: 99415 15237

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக